செவ்வல்லிப்பூவின் இதழ்களை எடுத்து பனவெல்லம் சேர்த்தோ அல்லது
தனியாகவோ கசாயமாக குடித்து வர உடலுறவினால் உடல் அதிக சூடேறி பெண்களுக்கு வெள்ளை படுதல்
உடல் மெலிதல் நீங்கி நல்ல அழகு உண்டாகும். ஆண்களுக்கு சிறுநீரில் விந்து வெளியேறுதல்
நின்று உடல் வெப்பம்.
செவ்வல்லிக் கிழங்கை அரைத்து செம்புத்தகட்டிற்கு கவசம்
செய்து எருவில் புடம் போட செம்பில் குற்றம் நீங்கும். இக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து
விட்டு சாப்பிட மேக நோய் தீரும். பித்தம் அகலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அல்லிக் காய்களை அவித்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட மிக ருசியாக இருப்பதுடன் மேற்கண்ட
குணங்கள் இருக்கும்.
செந்தூரம் செய்ய வேண்டிய சரக்குகளை செவ்வல்லிபூச்சாறு
விட்டு அரைத்து புடமிட நள்றாக செந்தூரம் ஆவதுடன் மருந்தின் குணமும் நன்றாயிருக்கும்.
மேற்படி
செவ்வல்லிப்பூ இதழ்,
செம்பரத்தைப் பூ,
ஆவாரம்பூ,
பலாசுப்பூ,
பலாசுப்பூ,
முருங்கைப்பூ,
கண்ணுப்பீளைப்பூ
சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி
அத்துடன்
தேங்காய்ப் பால்,
பனங்கற்கண்டு
சேர்த்து அதில் சிறிது
மஞ்சள்தூள்
சேர்த்து
சாப்பிட்டு வர கண் பார்வை அதிகரிக்கும். சர்க்கரை நோய் வராது. இருதயம், கல்லீரல், சிறுநீரகம்,
மூளை போன்ற அனைத்து ராஜ உறுப்புகளும் வலுவடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு
உடல் வலிமையோடு மிகுந்த அழகு பெறும்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்

No comments:
Post a Comment