Wednesday, 20 July 2016

சோற்றுக் கற்றாளை ஒரு காயகல்ப மூலிகை




 சோற்றுக் கற்றாளை ஏழுதடவை சுத்தி செய்தது. குமரியைத் தின்றால் குமரியை வெல்லலாம்.


கற்றாளை சுத்தி முறை கற்றாளையின் மேல் தோலை நீக்கி சிறியதாக நறுக்கி தண்ணீர் விட்டு பிசைந்து தண்ணீரை கீழே வடித்து விட வேண்டும். இதேபோல் ஏழு தடவை தண்ணீரில் அலசி தண்ணீரை கீழே ஊற்றிவிட வேண்டும்இதுவே கற்றாளையின் சுத்தி.

சோற்றுக் கற்றாளை ஜெயநீர்
ஏழு தடவை சத்தி செய்த கற்றாளை 200 கிராம்
படிகாரத் தூள் 2 கிராம்
கடுக்காய் தூள் 2 கிராம்
நாட்டு ரோஜாப்பூ. 5 எண்ணிக்கை
எடுத்துக் கொண்டு ஒரு சுத்தமான சில்வர் பாத்திரத்தில் வைத்து நன்றாக பிசைந்து.மூன்று மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். பின்பு ஒரு சுத்தமான வெள்ளைத துணியில் வடிகட்டி. ஒரு கண்ணாடிப் பாடடிலில் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளவும்

பயன்கள்:-   பெண்களுக்கு கண்ணுக்கு அடியில், முகத்தில் இரு தொடைகளில் கருப்பாக இருப்பதுடன் அரிப்பாக இருக்கும்.  அந்த இடங்களில் சிறிது ஜெயநீரை இரவில் பஞ்சில் நனைத்து போட்டு விட்டு காலையில் பஞ்ச கல்பம் அந்த இடத்தில் தேய்த்து பின் குளிக்க வேண்டும். பத்து நாட்களுக்குள் முற்றிலும் குணமாகும். முகம் பளபளப்பாக அழகாக இருக்ககுளிப்பதற்கு முன் முகத்தில் தேய்த்து விட்டு பின் அரை மணி நேரம் கழித்து வர முகம் பளபளப்பாக இருப்பதுடன் தோல் சம்பந்தப் பட்ட நோயும் வராது. கண்ணில் பூ விழுந்திருந்தாலோ கண்ணில் அடிபட்டு இரத்தமாக இருந்தாலோ அந்த கண்ணில் மூன்று சொட்டு விட்டு வர விரைவில் குணமாகும். பற்களில் வலி இருந்தால் அல்லது கறையிருந்தால் இரவில் உணவு உண்ட பின்பு இந்த ஜெயநீரைத் தொட்டு பல் துலக்க சரியாகும். மேலும் வாய் நாற்றம்; வாய்ப்புண் இருந்தால் இந்த
ஜெயநீரை வைத்து வாய்க் கொப்பளித்து வர குணமாகும். பெண்சளுக்கு வெள்ளைப்படுதல் வயிற்றுப்புண் இரத்த மூலம் உடல் சூடு உள்ளவர்கள் ஒரு நாளைச்கு ஒரு வேளை மட்டும் பத்து மில்லி அளவு சாப்பிட்டு வர குணமாசும். அளவு கூடினால் ஜலதோசம் படிக்கும்.

   
கண் எரிச்சல் மற்றும் கண்வலி பரவும் நேரத்தில் ஒரு வெள்ளைத்துணியில் நனைத்து இரு கண்களிலும் வைத்து ஒருமணி நேரம் மல்லாக்க படுத்திருந்தால் போதும். கண்வலி வராது உடலில் எந்தப் பகுதியிலும் சிறு வெட்டுக்காயம் பட்டு இரத்தம் வந்தால் அந்த இடத்தில் இந்த ஜெயநீரைப் பஞ்சில் நனைத்து வைக்க உடனே இரத்தம் நிற்கும். ஆறாத புண் உள்ள இடத்தில் ஜெயநீரை பஞ்சில நனைத்து துடைத்து வர அந்த இடத்தில் ஒட்தாது. புண் விரைவில் ஆறம். யோகத்திற்க சித்தி தரும்

 


 கண்மை
   சோற்றுக் கற்றாளைஒரு காயகல்ப முலிகை இம்மூலிகையைப் பற்றி அதிகமாக விவரிக்க வேண்டியிருக்கிறது. கற்றாளைக் கண்மை சோற்றுக் கற்றாளையின் ஒரு பக்கத் தோலை கத்தியால் சீவிவிட்டு தீபம் போடும் ஒரு மண் சட்டியில் சிற்றாமணக்கு எண்ணை ஊற்றி பஞ்சுத்திரியால் தீபம் போட்டு தோல் சீவிய கற்றாளையின் மடல் பாகத்தைப் புகை படும்படி பிடிக்க வேண்டும். புகை அதிகம் பட்டவுடன் ஒரு சுத்தமான கண்ணாடிப் பாத்திரத்தில் புகைக்கரியை வழித்து எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் வாட்டி தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
பின்பு கல்வத்தில் அந்தக் புகைக் கரியை சிற்றாமணக்கின் எண்ணைவிட்டு மைப்பருவத்தில் அரைத்து பத்திரப்படுத்தவும்.
இந்தக் கண்மையை குழந்தைகள் பெரியவர்கள் பயன்படுத்தி வந்தனர் இதனால் கண்ணுக்கு குளிர்சி ஏற்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதம் கண்சம்பந்தப்பட்ட எந்த நோயும் தாக்காது. மேலும் குழந்தைகளுக்கு கண்திருஸ்டி படாது.

   ஆனால் இன்று பாரம்பரியத்தை நாம் மறந்து விதவிதமாக கண் மையைப் பயன்படுத்தி இளவயதிலேயே கண் அறுவை சிகிச்சை செய்து கண்ணாடியைப் போட்டு விடுகிறோம்.
 பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்


Designed by RoyalCalif Technologies

97887 09295



No comments:

Post a Comment