தலைவலியைப் போக்கும் தைவேளை
தைவேளை இலை மூன்று
ஒரு நாட்டு வெங்காயம்
ஒரு கல்உப்பு
![]() |
| தைவேளை |
எடுத்து அரைத்து
ஒரு வெள்ளைத்துணியில் வைத்து வடிகட்டி சாறு எடுத்து இடது பக்கத் தலைவலிக்கு வலது பக்கக்
காதில் மூன்று சொட்டு சாறும் வலது பக்கத் தலவலிக்கு இடது பக்கக் காதில் மூன்று சொட்டு
சாறும் ஊற்ற வேண்டும். இரண்டு பக்கத் தலைவலியானால் இரண்டு காதிலும் ஊற்ற வேண்டும். தலைவலி ஐந்து நிமிடத்தில் போய்விடும். நீண்ட நாட்களாக
தலைவலியாக இருந்தால் அதே தைவேளை இலையை அதிகமாக அரைத்து சாற்றை பிழிந்து கீழே விட்டு
விட்டு சக்கையை மட்டும் தலையில் முழுலதும் வைத்து ஒரு வெள்ளைத் துணியை வைத்து கட்டி
அரைமணி நேரம் கழித்து அந்த சக்கையை மீண்டும் பிழிந்தால் தலையில் உள்ள நீர் சக்கையின்
மூலமாக உருஞ்சி வந்து விடும் தலை வலியும் போய்விடும்.
மேலும் தைவேளையின் பூக்களைப்
பறித்து பொடியாக நறுக்கி வெங்காயம், மிளகு, சீரகம், தக்காளி, தேங்காய், உப்பு சேர்த்து நெய்யில் கொத்து கீரையாக பொரித்து சாப்பிட தொண்டையில் சளி கட்டி பேசுவதற்கு கூடசிரமப்படுதல்,
தலைவலி காய்ச்சல் குணமாகும். எல்லோரும் பொதுவாக இந்த பூவை சமைத்து சாப்பிட ஆண்மை சக்தி
கூடுகிறது சர்க்கரைத் சத்து உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவு குறைகிறது
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்

No comments:
Post a Comment