Wednesday, 20 July 2016

சிற்றாமணக்கு எண்ணெய்



சிற்றாமணக்கு எண்ணெய்
.......
தயாரிப்பது...

தற்போது கடைகளில் எல்லாவகையான எண்ணெய்களும் மூலிகைப் பொருட்கள் தரமாகக் கிடைப்பதில்லை. அதனால் அதிலிருந்து தயாரிக்கப்படும் சரக்குகளும் தரமாக அமையாது. 


சிற்றாமணக்கு விதைகளை ஆட்டுரலில் போட்டு தண்ணீருக்குப் பதில் செவ்விளநீர் விட்டு நன்கு ஆட்டி எடுத்துக்கொண்டு எண்ணைச் சட்டியில் விட்டு காய்ச்சி வரும் போது மேலே எண்ணை மிதந்து வரும் அப்படி வரும் எண்ணையை தனியாக சேகரித்துக் கொள்ளவேண்டும். பின் எண்ணை வருவது நின்றவுடன் சேகரித்து வைத்ததை மீண்டும் அடுப்பில் வைத்து தண்ணிச்சத்தில்லாமல் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.



பயன்கள்: குழந்தைகளுக்குமலக்கட்டு இருந்தால் அரைசங்கு அளவு கொடுக்கவேண்டும். உடல் சூட்டினால் கண் பொங்கினால் கண் புருவத்தில் தடவினால் போதும். அம்மை நோய் வந்தவர்களுக்கு இந்த எண்ணையுடன் வேப்பிலை, மஞ்சள் சேர்தரைத்து உடம்பு முழுவதும் பூசி குளிப்பாட்டகுணமாகும்.

காயகல்பம் சாப்பிடுவதற்குமுன் நம்முடலைச்சுத்திசெய்யவேண்டும். அதற்கு இந்த எண்ணையை விரலில் தொட்டு காலையில் ஆசனவாயினுள் விட்டுத் தடவ பழைய மலம் வெளியேறும்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்

Designed by RoyalCalif Technologies

97887 09295

No comments:

Post a Comment