Wednesday, 20 July 2016

முள்ளுக் கீரைச் செயநீர் - அனைத்து வகை பாசானங்களைக் கட்டும்

முள்ளுக்கீரையில் பச்சையாக இருப்து ஒன்று மற்றொன்று படத்தில் இருக்கும் செம்முள்ளுக்கீரை.

இதன் இலையை பொரியல் செய்தோ அல்லது பருப்பு போட்டு கடைந்து சாப்பிடலாம். இக்கீரையை சூப் செய்தும் சாப்பிடலாம். 
இதற்கு நீரைப் பிரிக்கும் தன்மை உடையதால் உப்புச்சத்து உள்ளவர்களுக்கும் கல்லடைப்பு உள்ளவர்களுக்கும் 
கண்ணுப்பீளை,
சிறுநெருஞ்சில்,
நீர்முள்ளி,
சக்திச் சாரணை
இவற்றுடன் இந்த முள்ளுக்கீரையும் சேர்த்து கசாயமாகக் கொடுக்கப்படுகிறது. 
தங்கபஸ்பம் தராரிக்க இதன் சாறு பயன்படுகிறது.வீக்கம் கட்டிகளுக்கு இதன் இலையை வதக்கி கட்டிவர வீக்கம் குறையும். அல்லது அச்செடியின் சாம்பலுடன் சிறிது  பெருங்காயத்தாள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியாக அரைத்து கட்ட, கட்டி சீக்சிரம் பழுத்து உடையும். 
மூலிகையில் சத்து எடுப்பதில் பலவகை இருக்கிறது. அதில் உப்பு எடுப்பது ஒரு வகை.
முள்ளுக்கீரையில் ஜெயநீர் எடுப்பது பற்றியும் உப்பு எடுப்பது பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.
ஜெயநீர்:-
   தேவையான அளவு முள்ளுக்கீரை செடியை வெயிலில் காயவைத்து பின் ஒரு பெரிய இரும்புச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து தீயெரிக்க வேண்டும்.சட்டியில் உள்ள செடி புகையும் போது அதிலும் தீப்பற்றவிடவேண்டும்.இப்போது அடுப்பிலும் தீயெரிரும். சட்டியின் மேலேயும் தீ எரியும். சட்டியின் எரிந்தவுடன் மீதம் உள்ளதையும் சிறிது சிறிதாக போட்டு சாம்பல் வெண்மையாகிற வரை எரித்து பின் மறு நாள் சாம்பலின் அளவிற்கு நான்குபங்கு தண்ணீர் ஊற்றி தினந்தோறும் அடிக்கொரு தடவை கலக்கி வர வேண்டும். இவ்வாறு நான்கு நாட்கள் செய்து ஐந்தாம் நாள் கலங்காமல் தண்ணீரை மட்டும் வடிகட்டி தண்ணீரை அடுப்பில் வைத்து காய்ச்சவேண்டும். சுமார் நான்கு லிட்டர் தண்ணீர் என்றால் மூன்று லிட்டர் வற்றியவுடன் மீதமுள்ள ஒரு லிட்டரை கண்ணாடிப் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும் இது தான் முள்ளுக்கீரைச் ஜெயநீர். 

தண்ணீர் முழுவதும் வற்றிவிட்டால் அது உப்பாக மாறும். இதுவே முள்ளுக்கீரை உப்பு.
இந்த ஜெயநீரை வைத்து எல்லா வகை பாஸாணங்களையும் நெருப்புக்குப் போகாமல் கட்டலாம். இந்த ஜெயநீரைப் பயன் படுத்திச் செய்யும் எந்த பாஸாணத்திற்கும் தனியாகச் சுத்தி தேவை இல்லை.
கட்டுமுறை:- 
        உதாரணத்திற்கு வீரம் என்ற பாசானத்தை எடுத்துக் கொள்வோம். 
100 கிராம் வீரத்தை 
கல்வத்தில் வைத்து இந்த ஜெயநீர் சிறிது விட்டு கட்டியாக சுமார் பத்துநிமிடம் அரைத்து ஒரு ஓட்டிலிட்டு சிறு தீயாக எரிக்க வேண்டும். வீரம் உருகாமலும் புகையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். வீரத்திலுள்ள தண்ணீர் சத்து வற்றியவுடன் ஆறவிட்டு எடுத்து முன் போல் ஜெயநீர் விட்டரைத்து அடுப்பில் வைத்து முன்போல் புகையாமல் எரிக்க வேண்டும். சுமார் எட்டாவது தடவை வைக்கும் போது பாசானம் உருகாது. அப்போது தீயின் அளவைக்கூட்டிக் கொள்ளலாம்.11வது தடவை எரிக்கும் போது புகையாது. அப்போது தீயின் அளவை அதிகரித்து ஓட்டிலுள்ள வீரக்கட்டியை மாற்றி மாற்றி வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முழுக்கட்டாக இருக்கும்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்

Designed by RoyalCalif Technologies

97887 09295

No comments:

Post a Comment