மஞ்சக் காமாலைக்கு நீலி அவுரி என்னும் வண்ணான் அவுரி
இதற்கு வண்ணான் அவுரி என்றும் நீலி அவுரி என்றும் பெயர்.
மஞ்சள் காமாலை:- இந்த அவுரி இலையை கைப்பிடி அளவு எடுத்து பசுவின்
பால் விட்டரைத்து சிறிது பால் விட்டு கலக்கி காலையில் வெறு வயிற்றில் ஒருவேளை கொடுத்து
பின் சிறிது அவரி இலை 10 மிளகு சிறிது பால் சேர்த்து அம்மியில் அரைத்து தலையில் அப்பி
விடவேண்டும்.
![]() |
| வண்ணான் அவுரி |
இவ்வாறு தினம் மூன்று நாட்கள் செய்ய வேண்டும். மூன்ற நாட்களும் குளிக்கக்கூடாது. நான்காம் நாள் காலையில் ஒமமும் நூறு மில்லி பாலும்
சேர்த்து அரைத்து தலையிலிருந்து உடம்பு முழுவதும் தேய்த்து பச்சத் தண்ணீரில் குளிக்க
வேண்டும்.
பத்தியம்:- பெரியவர்களுக்கு உப்பில்லாமல் பால் சோறு மட்டும் சாப்பிட்டு
வரவும். சிறியவர்களுக்கு எண்ணை பலகாரத்தைத் தவிர்த்தும் எண்ணையில் தாளிக்காத சாம்பாரும்
பயன் படுத்த வேண்டாம். பெரியவர்களுக்கு நோயின்தன்மை அதிகரித்து இருந்தால் கரிசலாங்கண்ணிச்
சாற்றில் முன்று தடவையும் கீழாநெல்லிச்சாற்றில் மூன்று தடவையும் அரைத்து புடம் போட்ட
அன்னபேதிச் செந்தாரமும் கரிசலாங்கண்ணி சூரணமும் சேர்த்து காலையும் மாலையும் கொடுத்து
வர விரைவில் குணமாகும்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள் 
No comments:
Post a Comment