Wednesday, 20 July 2016

அன்றாட சமையலில் சோற்றுக் கற்றாளை



சோற்றுக் கற்றாளை ஜாம்
முன்பு சுத்தி செய்ததைப்போல் சுத்தி செய்த
கற்றாளை ஒரு கிலோ
கரும்பு வெல்லம் அரைக் கிலோ
இரண்டையும் தண்ணீர் ஊற்றாமல் ஒரு பாத்திரத்தில் போட்டு சூடேற்றவேண்டும். வெல்லம் கரைந்தவுடன் கீழிறக்கி வேறு பாத்திரத்தில் மெதுவாக மண் சுண்ணாம்பு இல்லாமல் வடிகட்ட வேண்டும். ஏனென்னால் வெல்லத்தில் தூசி சுண்ணாம்பு இருக்கும். மீண்டும் அதை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். தண்ணீர் சத்து வற்றி தேன் பருவத்தில் வரும் அதுதான் பருவம் அப்போது
ஐந்து கிராம் சுக்குத் தூள்
ஐந்து கிராம் சாதிக்காய்த் தாள்
போட்டு கிண்டி இறக்கி பயன்படுத்தவும்
   அல்வாப் போல் மிக மிக ருசியாக இருக்கும் ரொட்டியில் வைத்தது தொட்டு சாப்பிடலாம் பக்குவமாக கிண்டினால் ஓரு வருடம் வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது.  குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு பயன்படுத்தி வர எதிர்பாற்றல் அதிகம் பெருகி நோயில்லாமல் அழகாக திகழ்வார்கள். மற்றபடி சர்க்கரை நோயில் பாதிக்கப்பட்டவர் சூப் செய்து சாப்பிட்டு வர அந்நோயில் இருந்து விரைவில் மீண்டு சுகமாக வாழ்வார்கள் அது பற்றிஅடுத்து பார்ப்போம்.


சோற்றுக்கற்றாளை சாம்பார்
 கற்றாளை சுத்தி முறை கற்றாளையின் மேல் தோலை நீக்கி சிறியதாக நறுக்கி தண்ணீர் விட்டு பிசைந்து தண்ணீரை கீழே வடித்து விட வேண்டும். இதேபோல் ஏழு தடவை தண்ணீரில் அலசி தண்ணீரை கீழே ஊற்றிவிட வேண்டும். இதுவே கற்றாளையின் சுத்தி. பின் சுத்தி செய்த கற்றாளையை நெய்யில் நன்றாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் நாம் பருப்பு காய்கறிகள் போட்டு சாம்பார் வைத்து முடிக்கும் பருவத்தில் நெய்யில் வதக்கிய கற்றாளையைப் போட்டு தாழித்து விட வேண்டும்.
   நாம் இந்த சாம்பாரை சாப்பிடும் போது கற்றாளை வெள்ளாடாட்டுக் கறியின் கொழுப்பைப் போல் ருசியாக இருப்பதுடன் உடம்பும் மிக புத்துணர்ச்சியோடு இருக்கும்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்


Designed by RoyalCalif Technologies

97887 09295



No comments:

Post a Comment