Wednesday, 20 July 2016

சிறப்புப் பஞ்ச கற்பம்



வேப்பம் பருப்பு
   பஞ்ச கற்பத்தைப் பற்றி பல வைத்தியர்கள் அளவு முறையில் மாற்றி பயன் படுத்தி வந்தாலும் சிததர்கள் அனைவரும் கடுக்காத்தோடு
விதை நீக்கிய நெல்லி வத்தல்,
வெண்மிளகு,
கஸ்தூரி மஞ்சள், 
வேப்பம் பருப்பு 
 
வெண்மிளகு
கடுக்காய்








  



நெல்லி வத்தல்

கஸ்தூரி மஞ்சள்







ஆகியவற்றை சம அளவாகப் பயன்படுத்தச் சொல்லி இருக்கின்றனர். அதிலும் போகமாமுனிவர் எழுதிய போகர் 7000, என்ற நூலில் பஞ்சகல்பத்தை இரவில்  
கரிசலாங்கண்ணிச் சாற்றில்  
      ஊறவைத்து மறுநாள் காவையில்  
பசுவின் பால் 
     விட்டரைத்து தேய்த்து வெந்நீரில் குளிக்கும் படி சொல்லி இருக்கிறார்.    இம்முறையில் 15 நாட்களுக்கொருமுறை குளித்து வரச் சொல்லியிருந்தாலும்.

   நோய்களுக்குத் தக்கவாறு தோல்சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாரத்தில் இரண்டு நாட்களும் எயிட்ஸ் நோயாளிக்கு தொடர்ந்து 48, நாட்களும் நோயில்லா மற்றவர்களுக்கு 15, நாட்களுக்கொருமுறையும் கொடுத்து வருகிறோம்.

   இவ்வாறு தயாரித்து பயன்படுத்தும் பஞ்ச கல்பத்தினால் கபாலம் கெட்டியாகும். உரோமம் தும்பி போல் கருப்பாக வளரும் மழையில் நனைந்தாலும் குளிராது கண்பார்வை அதிகரிக்கும் உடம்பில் நச்சு நீர் வெளியேறும். ஞாபகசக்தி அதிகரிக்கும்

நீண்ட நாட்கள் தலைவலி நீங்கிவிடும்.

    சிறு வயதில் இருந்தே பயன் 15 நாட்களுக்கொரு முறைபயன் படுத்தி வந்தால் அவர்களக்கு 4448,வகையான நோய்கள் மற்றும் நரை திரை வராது என்றும் சித்தர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

   பாரம்பரிய வைத்தியங்களை கடைப்பிடித்து நோயின்றி வாழ்வோம்.

 பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்


Designed by RoyalCalif Technologies

97887 09295

2 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி

    ReplyDelete