அனைத்து வித நச்சுத் தன்மையைப் போக்கும் அவுரிச் செடி
பாம்பு கடிக்கு:-
அவுரி வேர் ஒன்று அதோடு 21 மிளகு சேர்த்து நன்றாகத் தட்டிப் போட்டு அதில் 200 மில்லி
அளவு உள்ள ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து விரியன் பாம்பு தவிர எந்த பாம்பு
கடித்தாலும் மணிக்கொரு தடவை 200 மில்லி வீதம் கொடுத்து வர வேண்டும்.
கடிவாயில் லேசாக பிளேடினால் கீறி பாம்பின் நஞ்சை நீக்க வேண்டும்.
நான் என் வாயை வைத்து நஞ்சை உருஞ்சி பல பேருக்கு எடுத்திருக்கிறேன். வாய்ப்புண் உள்ளவர்களும் அனுபவம் இல்லாதவர்களும்
முயற்சிக்க வேண்டாம்.
அதன் பின் அதே அவுரி இலையும் சிறிது மஞ்சளும் சேர்த்தரைத்து ஒரு
துணியில் முடிந்து சூடாக கடிவாயில் ஓத்தடம் கொடுக்க வேண்டும். பின் ஒத்தடம் கொடுத்ததையே
கடிவாயில் கட்டிவிட வேண்டும். இவ்வாறு தினம்
இரண்டு வேளை செய்ய வேண்டும். ஒரு வாரத்தில் சரியாகி விடும்.
இதே பக்குவப்படி நாய், தேள், பூனை முதலிய எல்லா வகை விச கடிகளுக்கும்
பயன்படுத்த வேண்டும்.
ஆனால் எல்லா வகை விரியன் பாம்பிற்கு அவுரி வேர் மிளகோடு விருசுவிரட்டி
வேர் ஒன்று சேர்த்து கசாயம் வைத்துக் கொடுக்க வேண்டும். மற்ற பாம்புகளுக்கு ஏழுநாட்களும்
விரியன் வகைப் பாம்புகளுக்கு நாற்பது நாட்களும் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு சில
இடங்களில் விரிசு விரட்டி மூலிகைக்கு தரைப்புகையிலை என்றும் நிலக்கடம்பு என்றும் அழைக்கின்றனர்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்

No comments:
Post a Comment