Friday, 22 July 2016

கரு கருவென்று முடி வளர கரும்பூலாம் பழம்



கரு கருவென்று முடி வளர கரும்பூலாம் பழம்.
கரும் பூலாம் பழம் வேண்டிய அளவு எடுத்து முற்றிய தேங்காயினுள் நீரை வெளியேற்றி விட்டு அதனுள் பழத்தையும் கரிசலாங்கண்ணி சாற்றையும் ஊற்றி மூன்று நாட்கள் வைத்திருகக்கவும். 






அதே போல் சோற்றுக் கற்றாளை மடலை எடுத்து நடுவில் நேராக கீறி அதனுள் வெந்தயத்தை செசலுத்தி மூன்று நாட்கள் வைக்கவும். 
நான்காம் நாள் தேங்காயை உடைத்து உள்ளிருப்பதையும் கற்றாளையில் வெந்தயம் முளைத்திருக்கும் அதையும் கற்றாளையோடு வழித்து எடுத்துக் கொண்டு,    மேற்படி வேண்டிய அளவு அரைத்த கரிசலாங்கண்ணி விழுது, மருதோன்றி விழுது தேவையான தேங்காய் எண்ணை சேர்த்து பக்குவமாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வர முடி உதிராது. செம்பட்டை மாறி கருப்பாக நீண்டு வளரும்.கண் எரிசல் தீர்ந்து பார்வை அதிகரிக்கும். மஞ்சக் காமாலை நோய்த்தாக்காது. 
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்



Designed by RoyalCalif Technologies

97887 09295

3 comments: